எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் படத்தில் ரிஸ்க்கான சண்டைக் காட்சி! துணிச்சலாக டூப் தவிர்த்த சாக்ஷி அகர்வால்!

திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். இப்போது அவர் பரபரப்புக்கு பேர்போன எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை ‘என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகள் உண்டு. அந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. ரிஸ்கான அந்த காட்சியில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் தானே முன்வந்து துணிச்சலாக நடித்தார். சண்டைப் பயிற்சியாளர் கனல்’ கண்ணனிடம் பாராட்டையும் பெற்றார்.படம் பற்றிய கூடுதல் தகவல்கள்:-

‘சட்டம் ஒரு இருட்டறை’யில் தொடங்கி 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும்பாலான படங்களில் பரபரப்பான கதைக்களத்தை அமைத்தவர். ‘நான் கடவுள் இல்லை’ படத்திலும் அதையே தொடர்கிறார் . ஆகவே படத்தில் பரபரப்புக்கு குறையிருக்காது என நம்பலாம்.

நான்கு சண்டைக் காட்சிகள் தவிர படப்பிடிப்பு முழுவதும் முன்பே முடிந்துள்ளது. சமீபத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் கம்பீரமான இதுவரை பார்க்காததாக இருக்கும்.

இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்று இயக்குநர் எஸ் எஸ் சந்திரசேகர் கூறுகிறார். அந்தளவுக்கு இரண்டு சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தில் இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். டயானா ஸ்ரீ என்கிற இளம் பெண், இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here