Home சினிமா விவாகரத்துகள் பெரும் காரணம் என்ன? அலசி ஆராய வருகிறது ‘ஆறடி’யில் கவனம் ஈர்த்தவரின் மூன்றாவது படம்...

விவாகரத்துகள் பெரும் காரணம் என்ன? அலசி ஆராய வருகிறது ‘ஆறடி’யில் கவனம் ஈர்த்தவரின் மூன்றாவது படம் ‘2 K ஹார்ட்.’

‘ஆறடி’ என்ற படத்தில் சுடுகாட்டு வெட்டியானாக பெண் கதாபாத்திரத்தை உருவாக்கி விருதுகள் பல பெற்ற ஜெ. சந்தோஷ் குமார் இயக்கியுள்ள படம் ‘2 K ஹார்ட்.’

லிங்கேஷ் குமார், பிரகதி, வித்யா, தேவஶ்ரீ, கார்த்திக் ராஜா, பாலகிருஷ்ணன், பவர்ஸ்டார் சீனிவாசன், சாப்ளின் பாலு, ஜானி, கே.மணிகண்டன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “பர்வதன் அவர்களின் கதைவசனத்தில் ஆறடி என்ற படத்தை முதலாவதாத இயக்கினேன். அதில் சுடுகாட்டில் பெண் வெட்டியாளாக கதாநாயகியை நடிக்க வைத்து விருதுகள் பல பெற்றேன். தரைப்படை, கப்பல்படை, விமானபடை என்பதன் சுருக்கமாக தகவி என்ற படத்தை எடுத்தேன். அதில் சிறார்களால் நக்சலைட்டுகள் திருந்துவதாக எடுத்தேன். அதுவும் பல்வேறு விருதுகளை பெற்றது. மூன்றாவதாக இந்த படத்தை இயக்கியுள்ளேன். இதில் 2000க்குப் பின் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை சுவைபட அனைத்து தரப்பினரும் பார்க்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறேன். பர்வனின் கதை வசனம் படத்திற்கு மிகவும் வலுவுள்ளதாக இருக்கிறது என்று படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள்” என்றார்.

இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ள பர்வதன் படம் பற்றி பேசியபோது,”காதல் திருமணம் செய்தவர்களும் விரைவில் மணமுறிவுக்கு உட்படுவது ஏன்?
பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் சிறந்ததா? 2000-த்திற்கு பிறகு பிறந்தவர்களின் திருமணம் அதிகமாக விவாகரத்தில் முடிவதற்கு காரணம் என்ன?
என்ற கேள்விகளுக்கு விடைதாங்கி வரும் படம் இது” என்றார்.

‘ஆறடி’, தகவி’ ஆகிய படங்களை தயாரித்த எஸ். நவீன்குமார் தனது
ஸ்ரீ சிவ குடும்பம் பிலிம்ஸ் சார்பில் மூன்றாவது படமாக இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

தர்வேஷ் ஒளிப்பதிவையும், தயானந்த் பிறைசூடன் பாடலுக்கு இசையையும், சேலம் சண்முகசுந்தரம் – சேலம் துரைராஜ் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும், சாய் நரேஷ்குமார் படத்தின் பின்னணி இசையையும், பா. சேதுமாதவன் பாடல்களையும், பர்வதன் கதை வசனத்தையும் , விக்னேஷ் குமார் நடன பயிற்சியையும், சேலம் துரைராஜ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்