பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ வெப்சீரிஸ் குழுவினர் மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு ஹாரர் விருந்தளித்து அசத்தல்!

பிரைம் வீடியோ தமிழ் திகில் தொடரான தி வில்லேஜ் சீரிஸை விளம்பரப்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஆச்சர்ய ஹாரர் விருந்தளித்தது. இந்நிகழ்வு ஆர்யாவின் தீவிர ரசிகர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ பயணிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு  ஆச்சரிய நிகழ்வை பிரைம் வீடியோ நடத்தியது. தி வில்லேஜ் சீரிஸில் வரும் ஹாரர் நிகழ்வை, அந்த சீரிஸில் நடித்த நடிகர்களைக்  கூட்டி வந்து மெட்ரோ ரெயிலுக்குள் நடத்தி, பயணிகளை எதிர்பாராத ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது தி வில்லேஜ் படக்குழு.  இக்குழுவில் தி வில்லேஜ் நாயகன் முன்னணி திரைப்பட நடிகர் ஆர்யா கலந்து கொள்ள பயணிகள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.  இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களும் இந்த குழுவில் கலந்துகொண்டார். கிராஃபிக் நாவலின் திகில் அனுபவத்தை திரையில் கொண்டு வந்த படக்குழு, ரீலில் இருந்து நிஜத்திற்குக் கொண்டு வந்தது, நிச்சயமாக மெட்ரோ பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.https://x.com/PrimeVideoIN/status/1729449366426124299?s=20

இந்தத் சீரிஸை, இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.  பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும்  தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள்  இணைந்து நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here