மக்களிடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது அந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள்! அந்த வகையில் சைக்கோ கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீங்கிரை’ படத்தின் டிரெய்லரும் பாடலும் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே ஆர்வத்தையும் படம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.சித் ஸ்ரீராம் பாடிய ‘அவிழாத காலை’ எனும் ரொமான்டிக் பாடல் இளைஞர்களின் மனதைக் கவர, பத்து லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
படம் பற்றிய கூடுதல் தகவல்கள்:-
இந்த படத்தில் ஶ்ரீகாந்த்தும், வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அபூர்வா ராவ், ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் இந்த படத்தின் நாயகிகள்! முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பட வெளியீட்டுக்கு முந்தைய இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
படக்குழு:-
பின்னணி இசை – ஹரிஷ் அர்ஜுன்
ஒளிப்பதிவு – யுவராஜ் மனோகரன்
கலை இயக்குநர் – என்.கே. ராகுல் படத்தொகுப்பு – சி.எஸ். பிரேம் குமார்