‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகும் ‘தணல்’ படத்தில் அதர்வா கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
காப் த்ரில்லர் சப்ஜெக்டில் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ளார்.
படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு வில்லனாகவும் நடித்துள்ளனர். ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ள நிலையில், டிரெய்லர், பாடல் மற்றும் பட வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதர்வா ‘100’, ‘ட்ரிக்கர்’ உள்ளிட்ட படங்களில் போலீஸாக நடித்து கவனம் ஈர்த்ததையடுத்து மீண்டும் போலீஸாக நடிப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படக்குழு:-
இயக்குநர்: ரவீந்திர மாதவா
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படத்தொகுப்பு: கலைவாணன்
ஸ்டண்ட் மாஸ்டர்: ஆர்.சக்தி சரவணன்
கலை இயக்குநர்: எஸ். அய்யப்பன்
பாடலாசிரியர் – விவேக், கார்த்திக் நேதா