‘தேஜாவு’ படத்தை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே நோக்கம்! -‘தருணம்’ படத் துவக்க விழாவில் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் உறுதி

அருள்நிதி நடிப்பில் ‘தேஜாவு’ படத்தை இயக்கி தன்னை திரும்பிப் பார்க்க வைத்த அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் அடுத்த படம் ‘தருணம்.’

கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் இந்த படத்தை ழென் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் துவக்க விழா 7.5. 2023 அன்று சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ‘‘இந்த விழாவிற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் எடுக்க பேசிக்கொண்டிருந்தோம். இப்போது அதற்கான வாய்ப்பு. இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார்.

என் தேஜாவு பட எடிட்டர் இந்த படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவு படத்தை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்த கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன்” என்றார்.

படத்தின் நாயகன் கிஷன் தாஸ், ‘‘நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே இந்த படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே இசையமைப்பாளர் தர்புகா சிவாதான். அவர் இந்த படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

நாயகி ஸ்மிருதி வெங்கட் ‘‘இந்த படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். படம் பெரிய வெற்றிபெறும்” என்றார்.
தயாரிப்பாளர் புகழ் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன் என் நண்பர் என்பதால் இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்த படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது” என்றார்.எடிட்டர் அருள் இ சித்தார்த், ‘‘புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு தேஜாவு படத்தில் வாய்ப்பு தந்தார். இந்த படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். என் மனைவி அவரின் ரசிகை” என்றார்.

நிகழ்வில் தயாரிப்பாளர் விஜய் பாண்டி, தயாரிப்பாளர் டில்லிபாபு, இயக்குநர் கணேஷ் விநாயக் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

படக்குழுவினர்:
எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
மக்கள் தொடர்பு – சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM)
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் ஏ ஈடன் (ழென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here