‘பூ’ ராமு நடித்த ‘கிடா’வுக்கு கோவா திரைப்பட விழாவில் அங்கீகாரம்! இந்தியன் பனோரமாவில் தேர்வாகி அசத்தல்!

கடந்த 80 வருடங்களாக நடந்து வருகிற, உலகப் புகழ்பெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் ‘கிடா’ எனும் தமிழ்ப் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது.

படம் முழுமையாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. அந்த விழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக இப்படம் தேர்வாகியுள்ளது!

இந்த படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதுரை அருகேயுள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனுடைய தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்வதே கதைக்களம்.

தமிழ் சினிமாவை உயர்த்திப் பிடிக்கும் உன்னத படைப்பாக, தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது ‘கிடா.’

புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘கிருமி’, ‘ரெக்க’ படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ரா.வெங்கட் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களை தந்த ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு:-
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
கலை இயக்கம் : K.B.நந்து
ஸ்டண்ட் : ஓம் சிவ பிரகாஷ்
பாடல்கள் : ஏகாதசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here