Home விமர்சனம் டாக்ஸிக் சினிமா விமர்சனம்

டாக்ஸிக் சினிமா விமர்சனம்

டாக்ஸிக் என்பதை தமிழில் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று சொல்லலாம். 1947 காலகட்டத்தில் நடக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே அப்படியான தன்மையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்.

ஹீரோ யஷ்ஷுக்கு 2 ரோல்கள். இருவருமே கேங்ஸ்டர்கள். அந்த அடர் தாடி மீசையும், முரட்டுத்தனமான உடற்கட்டும் கேரக்டருக்கு பொருத்தம். இருவருக்கும் பொதுவான வேலை படம் முழுக்க பலநூறு பேரை கொடூரமாக வெட்டிக் கொல்வது, சுட்டு வீழ்த்துவது. ஏன் அத்தனைப் பேரைக் கொல்கிறார்கள் என்பதை படம் பார்த்த ஒருவரால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை வந்து கொண்டிருக்கிற விமர்சனங்கள் உணர்த்துகிறது. கதையின் லட்சணம் அப்படி. அந்த இரு யஷ்ஷும் கொலை செய்த நேரம் போக புகை பிடிப்பதும், குடிப்பதும், ஹீரோயின்களை கட்டித்தழுவி உடற்சுகம் பெறுவதுமாக பொழுதைக் கழிக்கிறார்கள்.

கியரா அத்வானி, ருக்மணி வசந்த் கவர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, அக்சய் ஓபராய், சுதேவ் நாயர், பாலாஜி மனோகர், சுர்ஜித் கோபிநாத், அமித் திவாரி, டேரல் டி சிவா, கைல் பால், பெனிடிக்ட் கேர்ரட், ஹரிஷ் பரமஹ்ரி, டெட்டியான ஹெய்டர் என இன்னபிற கேரக்டர்களை ஏற்றிருப்போரின் பங்களிப்பு போதுமானதாக இருக்கிறது.

படம் முழுக்க வன்முறை, ரத்தச் சகதி. அதற்கேற்ப அதிரடியாக அமைந்திருக்கிறது ரவி பஸ்ரூரின் பின்னணி இசை. நான்கைந்து இசையமைப்பாளர்களின் இசையில் நான்கைந்து பாடல்கள் அணிவகுக்கின்றன.

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரின் உழைப்பும் தரம்.

படத்தின் மேக்கிங் ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சரியான கதையில்லாமல் வன்முறையாலும் பாலியல் உறவுக் காட்சிகளாலும் நிரப்பியதால் படம் ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது.

-சு.கணேஷ்குமார்

 

REVIEW OVERVIEW
டாக்ஸிக் சினிமா விமர்சனம்
Previous articleஹாய் சினிமா விமர்சனம்
toxic-movie-reviewடாக்ஸிக் என்பதை தமிழில் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று சொல்லலாம். 1947 காலகட்டத்தில் நடக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே அப்படியான தன்மையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ். ஹீரோ யஷ்ஷுக்கு 2 ரோல்கள். இருவருமே கேங்ஸ்டர்கள். அந்த அடர் தாடி மீசையும், முரட்டுத்தனமான உடற்கட்டும் கேரக்டருக்கு பொருத்தம். இருவருக்கும் பொதுவான வேலை படம் முழுக்க பலநூறு பேரை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்