விளையாட்டு வீரர்களுக்கு உதவ செயல் திட்டம் தீட்டி வருகிறோம்! -பிறந்தநாளில் நற்பணி மன்றம் துவங்கிய நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் துவங்கியிருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…

என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்!

இதன் தலைவராக திரு.சீத்தாராம் அவர்களும், செயலாளராக திரு.KV.துரை அவர்களும் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

விஷ்ணுவிஷால் நற்பணி மன்ற தொடர்புக்கு: +91 7305111636 – 044 35012698

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here