Home சினிமா விமல் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

விமல் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

விமல் நாயகனாக நடிக்க கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியுள்ளது. படப்பிடிப்பை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, ‘விடுதலை’ சேத்தன், ‘பருத்திவீரன்’ சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடும் வகையில், ஒரு அசத்தலான காமெடி எண்டர்டெயினராக இப்படத்தை, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர்.

மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘ககனச்சாரி’, ‘பொன்மேன்’ உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றார்.

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்