பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் இவர்களை கௌரவிக்கும் விதமாக வேலம்மாள் கல்விக்குழுமம் விளையாட்டு மற்றும் அறிவியல் கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
செல்வி.ஷீத்தல் தேவி பாரா ஆர்ச்சர் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் மற்றும் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆகியோருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன் வரவேற்பு அளித்தது. செப்டம்பர் 18, 2024 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வானது, பள்ளிமாணவர்களின் அசாதாரண சாதனைகள் மற்றும் விளையாட்டுக்கான பங்களிப்புகளை அங்கீகரித்த ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக பதிவானது.
விழாவில், வேலம்மாள் நெக்ஸஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா விளையாட்டு மற்றும் அறிவியல் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இளம் வேலம்மாள் ஒலிம்பிக் சாதனையாளர்களின் எதிர்காலத்தை ஆதரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. விளையாட்டுத் திறமையை வளர்ப்பதிலும், இளம் ஆர்வலர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதிலும், வேலம்மாளின் அர்ப்பணிப்புக்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். செல்வி.ஷீத்தல்தேவி மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரின் பங்களிப்பு, கலந்து கொண்ட அனைவருக்கும் உத்வேகமாக அமைந்தது. இதுமாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைக் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.