ஏழு நிமிட சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் காட்சி! ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டுபோகவிருக்கும் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா.’ 

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இப்படம் ஜூலை 28, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் புரமோக்கள், விளம்பரங்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியப் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில் இப்படம் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ள நிலையில், பார்வையாளர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, அபாரமான அட்வென்சர், அதிரடி சண்டை காட்சிகள் என இப்படம் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்குத் தள்ளியுள்ளது.

இந்த நேரத்தில், க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் எபிசோட் 7 நிமிட சிங்கிள்-ஷாட் காட்சியாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க பெரும் ஆச்சர்யங்களையும், கவர்ச்சிகரமான தருணங்களையும் கொண்டிருக்கும் இப்படம் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தின் உச்சமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கத்தில், ஷாலினி ஜாக் மஞ்சு மற்றும் அலங்காரப் பாண்டியன் தயாரித்துள்ள, ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படத்தில் கிச்சா சுதீப், நிருப் பண்டாரி, நீதா அசோக், மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார், பாடல்கள் ஏற்கனவே இசை ஆல்பங்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆஷிக் குசுகொல்லி படத்தொகுப்பை செய்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here