விலங்கு இணைய தொடர் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்; உங்களை ஏமாற்ற மாட்டோம்! -பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் ஹீரோ விமல் உறுதி

விமல் – இனியா நடிப்பில், இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விலங்கு‘ ஜீ5 ஒரிஜினல் இணைய தொடர், வரும் பிப்ரவரி அன்று வெளியாகிறது. அதையொட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், ”இந்த கதையை  முதலில் படமாக பண்ணலாம் என முடிவு செய்திருந்தோம். பின்னர் கதை பெரியது என்பதால் தொடராக எடுத்துவிட்டோம். திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை செட் போட்டு எடுத்துள்ளோம். எல்லோரும் சென்னையில் எடுங்கள் என்று சொல்லியும் தயாரிப்பாளர் மதன் அங்கு தான் எடுக்க வேண்டும் என்றார். அந்த அளவு கதையை நம்பினார். பாலசரவணன் நான் நினைத்ததை விட அற்புதமாக நடித்துள்ளார். விமல் அண்ணாவுக்கு இந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது. நான் ஓகே சொன்னாலும் இன்னும் சரியாக வரவில்லை என மீண்டும் நடித்துக் கொடுத்தார்” என்றார்.

நடிகர் விமல் பேசியதாவது, ”நான் ஹீரோ. ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லாமல் இருந்தார். ஒரு படம் தோல்வி கொடுத்த பிரசாந்த் எல்லோரும் இணைந்து எங்கள அனுபவத்தை பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம். எங்களை நம்பி ஜீ5 இதை முன்னெடுத்துள்ளார்கள். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமே நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக விலங்கு இருக்கும் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் இந்த தொடர் பிடிக்கும்” என்றார்.

நடிகை இனியா, ”ஒரு நல்ல படம் மூலம் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இது எனது முதல் வெப் தொடர் அதுவும் எனது முதல் படத்து ஹீரோவுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் சினிமாவை இப்போது சீரியஸாக பார்க்கிறார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. 9 மாத கர்ப்பிணி பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக கொஞ்சம் எடை கூடி நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சி. விலங்கு தொடர் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் பாலசரவணன், ”நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன் அப்போது தான் இந்தக் கதை சொல்லி இதில் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த நண்பனுக்கு நன்றி” என்றார்.

7 எபிஸோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக  க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்.என்.ஆர். மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திர  நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here