சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் வள்ளி மயில்.’
இந்தபடம், 1980 களில் புகழ் பெற்று விளங்கிய ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது. சுசீந்திரன் – விஜய் ஆண்டனி முதல் முறையாக இணைவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்காக பழமையான சென்னையை கட்டமைக்கும், பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சென்னையை தொடர்ந்து டெல்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்..ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் – ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் – உதயகுமார், மக்கள் தொடர்பு – சதீஷ் AIM, பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர்.
ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற தரமான படைப்புகளை தயாரித்து தமிழ்த் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளராக திகழும் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் குறித்த விவரங்கள் விரைவில்…