ஆர்.ஜே. பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, கலக்கப்போவது யாரு’ புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீட்ல விசேஷம்.’
‘பதாய் ஹோ’ என்ற இந்திப்படத்தை, உரிமை பெற்று தமிழில் இயக்கியிருக்கிறார்கள் ஆர்.ஜே. பாலாஜியும் சரவணனும்!
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 10.6. 2022 அன்று மாலை சென்னையில் நடந்தது.
விழாவில் படத்தின் நாயகன் ஆர்.ஜே. பாலாஜி, நாயகி அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத் தயாரிப்பாளர்கள் போனி கபூர், ‘சத்யஜோதி’ தியாகராஜன், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
படத்தின் தலைப்பு வீட்ல விசேஷம் என்றிருப்பதால் அதை பிரதிபலிக்கும் விதமாக விழா நிகழ்விடத்தின் முகப்பை கல்யாண மண்டபம் போல் அலங்கரித்திருந்தனர். விழா அழைப்பிதழும் கல்யாண பத்திரிகை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.
விழா மேடையில் சீனியர் இயக்குநர்கள் பி. வாசு, கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி மூவரும் எந்தவொரு தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில், வெற்றிப் படங்களை இயக்குகிற சூட்சுமம் தெரிந்த முன்னுதாரண இயக்குநர்கள் என குறிப்பிட்டு அவர்களுக்கு மக்கள் இயக்குநர் என பட்டமளித்து நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார் ஆர்.ஜே.பாலாஜி.
ஆர்.ஜே. பாலாஜியின் மனைவி இதுவரை பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதில்லை. முதன் முறையாக வீட்ல விசேஷம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் அவரைப் பார்க்க முடிந்தது. இந்த படத்தில் அவர் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியிருக்கிறார்.
திருமண விழாக்களில், வாழ்த்த வந்தவர்களுக்கு தேங்காய், பழம் போட்டு தாம்பூலப் பை வழங்கப்படுவதைப் போல இந்த நிகழ்விலும் வழங்கப்பட்டது.

