வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’
இந்த படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை டி.என். கபிலன் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணிபுரிகிறார்.