இந்தியாவின் மிக முக்கிய படமான ‘லைகர்’ வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்தியா முழுதும் ரசிகர்களைச் சம்பாதித்திருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் படம் என்பதோடு இதுவரை திரையில் கண்டிராத அதிரடியான மாஸ் வில்லனாக நடிகர் விஷ் கலக்கியிருப்பதும் சேர்ந்து படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது!
விஷ் 12 வருட போராட்டங்களுக்குப் பிறகு நடிகனாக இந்த இடத்திற்கு வந்துள்ளார். மாடலாக துவங்கி, துணை இயக்குநராக வேலை பார்த்து Puri Connects எனும் பெருமை மிகு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக மாறியது வரை அவர் தன் முன்னேற்றத்திற்கு பெரும் உழைப்பை தர வேண்டியிருந்தது.
இளம் வயதிலேயே பன்முக நடிகராக மிளிரும் விஷ் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிய மெஹபூபா திரைப்படம் அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. விஷ் எப்போதும் பூரி ஜெகன்நாத்தை குருவாக தனது நண்பராக தன் நலம் விரும்பியாக மதிப்பவர். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஷ் நடிக்கும் இரண்டாவது படம் இது.
சமீபத்தில் வெளியான ‘லைகர்’ டிரெய்லரில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்களிடம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஷ். பாலிவுட்டின் அறிமுகப்படத்திலேயே மிகபிரமாண்ட வில்லனாக நடிப்பது அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது
.