சமுத்திரகனி, யோகி பாபு நடிப்பில் ஹைப்பர்லிங்க் வடிவில் உருவான ‘யாவரும் வல்லவரே’ டிசம்பர் டிசம்பர் 29-ம் தேதி ரிலீஸ்!

சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே.’ என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகிறது

படத்தை, ‘தீ கமிட்டி பிக்சர்’ கி.ஆனந்த் ஜோசப்ராஜ் தயாரித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த 11:11 புரொடக்‌ஷன் டாக்டர் பிரபு திலக் வழங்குகிறார்.

படம் பற்றி டாக்டர். பிரபு திலக் வால்டர், ‘‘ஹைப்பர்லிங்க் வடிவில் நான்கு வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைக்கும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் திரைக்கதையை சொன்னபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமைமிக்க நடிகர்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.

படக்குழு:
ஒளிப்பதிவு: ஜெய்ஸ்
இசை: என் ஆர் ரகுநந்தன்
படத்தொகுப்பு: ராமா ராவ்
கலை: சிவா யோகா
ஸ்டண்ட்: வெற்றி வீரா
பாடல்கள்: பொன் முதுவேல், தீப செல்வன், ஆதிரை
பாடகர்கள்: ஜிவி பிரகாஷ்குமார், என் ஆர் ரகுநந்தன், பத்மலதா, லிஜேஷ் குமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன், எம்.பி. ஆனந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here