தமிழில் இன்னொரு திகில் படம். சிரிப்பு மசாலா தூவாத சீரியஸான கதைக்களம்.
அந்த இளைஞர் தான் இயக்கப்போகும் திரைப்படத்திற்கு கதையெழுத, அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு சென்று தங்குறார். அங்கு ஆவி நடமாட்டம் இருப்பதை உணர்கிறார்.
ஆவி, அமானுஷ்யம், பேய், பிசாசு என சுற்றிச் சுழலும் கதைகளில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பேய் தன் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கத் துடிக்கும். அதற்கு அந்த பேய் எடுக்கும் முயற்சிகள் திரைக்கதையாக விரியும்.
இந்த கதையின் போக்கும் அப்படியேதான். ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக நம்ப வைத்தவனின் சூழ்ச்சியில் சிக்கிச் சின்னாபின்னமாகி உயிரை விடுகிறாள்; பேயாக உருமாறுகிறாள். அவளுக்கும் கதை எழத வந்தவருக்கும் என்ன தொடர்பு? அந்த பேய் சம்பந்தப்பட்டவர்களை எப்படி பழி தீர்த்தது? என்பதே கதை.
அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கும் முன்கதை மனதை உலுக்குகிறது! படத்தின் ஆரம்பக் காட்சியும் அசத்தல். இயக்கம்: இசாக்கதாநாயகனாக ஜெமினி. வெகுநாள் கழித்து தமிழ் சினிமாவில் மீசை, தாடியில்லாத வழவழ முகத்துடன் ஒரு ஹீரோவை பார்க்கிற அனுபவமே வித்தியாசமாக இருக்கிறது. அந்த ஹீரோ பதட்டம், கோபம் என அத்தனை உணர்வுகளையும் தான் அணிந்திருக்கும் கண்ணாடிக்குள் பரபரக்கும் விழிகளின் வழி வெளிப்படுத்துவது கவனம் ஈர்க்கிறது!
மேனியில் இளமையும், இதழ்களில் செழுமையுமாய் ரீனா கிருஷ்ணன். தன்னுடன் பேசக்கூட நேரம் ஒதுக்காமல் கதை எழுதுவதிலேயே கவனம் செலுத்துகிற கணவனோடு ஒட்டி உறவாட முயன்று ஏமாற்றத்தைச் சந்திக்கும் கதாபாத்திரத்தில் துடிப்பான நடிப்பால் கவர்கிறார்.
குரூரமான பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரை விடும் பாத்திரத்தில் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார் காவியா.
தன்னை கொலை செய்த அனைவரையும் பழி தீர்த்த பேய் வாட்ச்மேனை மட்டும் விட்டு வைத்திருக்கிறதே என யோசிக்கும்போது, ஹீரோ அவரை சாமர்த்தியாக சிக்க வைக்கும் காட்சி ‘அட’ போட வைக்கிறது!
பின்னணி இசையில் கதையின் விறுவிறுப்புக்குத் தேவையானதை செய்திருக்கிறார் இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஷமீல்.ஜே.
பிரசாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
சம்பந்தப்பட்ட பேய் தான் பேயாக திர
சம்பந்தப்பட்ட பேய்க்கும்
இருக்கும்.
யாரேனும் துரோகம் செய்து கொலை