24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற சென்னையில் தொடர்ந்து ஒரே மாதிரியான கொலைகள் நடந்துகொண்டிருக்க போலீஸ் சுறுசுறுப்பாகிறது. சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் பொறுப்பு அசிஸ்டண்ட் கமிஷனர் அரவிந்தனிடம் வருகிறது. இது கதை.
அவர் என்னவெல்லாம் கண்டுபிடித்தார், எப்படி கண்டுபிடித்தார், யார் குற்றவாளி என்பதெல்லாம் திரைக்கதை.
அசிஸ்டண்ட் கமிஷனராக நவீன் சந்திரா. சிரிப்பு என்றால் என்ன என்று கேட்பவர் போல் எந்த நேரமும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் காட்டும் தீவிரம்