Home விமர்சனம் அன்பில் அவன் சினிமா விமர்சனம்

அன்பில் அவன் சினிமா விமர்சனம்

காதலும் மோதலுமாய் ‘அன்பில் அவன்.’

சூர்யா – இயல் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி. இயலுக்கு மலைப் பிரதேசம் ஒன்றில் ஹோம் ஸ்டே பிஸினஸ் தொடங்க வேண்டுமென்பது கனவு. அதை நிறைவேற்ற சூர்யா எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமே கதையோட்டம்…

சூர்யாவாக அசோக் செல்வன், இயலாக பிரீத்தி முகுந்தன். லவ் கெமிஸ்ட்ரி இயல்பாக இருக்க, வலிந்து திணிக்கப்பட்ட சண்டை சச்சரவுகளில் பிரீத்தியின் ஆக்ரோஷம் அதிகமாகவும், அசோக்கின் ஆத்திரம் அடக்கி வாசிப்பதாகவும் இருக்கிறது.

ஹீரோ 70 அடி உயரத்திலிருந்து குதிப்பதாக ஒரு காட்சி. அதில் டூப் பயன்படுத்தாமல் அசோக் செல்வனே துணிச்சலாக குதித்தார் என்பது கூடுதல் செய்தி.

எம்.எல்.ஏ.வாக கதிர்பாலு, இன்ஸ்பெக்டராக காமவெறியராக மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக சாபுமோன் அப்துசமத் மூவரும் கூட்டணியமைத்து போட்டி போட்டு வில்லத்தனம் செய்திருக்கிறார்கள். அந்த கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கிற அந்த சண்டைக் காட்சி ‘டாக்ஸிக்’, ‘தி பாரடைஸ்’ படங்கள் தந்த எரிச்சலுணர்வை ரிப்பீட் செய்வது போலிருக்கின்றன. அத்தனை ரத்தச்சகதி சம்பவங்களுக்குப் பிறகு ஹீரோவும் ஹீரோயினும் உயிர்ந்தெழுந்து, நினைத்ததை செய்து முடிக்கிறார்கள் என்பதை ஏற்க, அடியன்ஸ் முழு முட்டாள் மனநிலைக்கு சென்று திரும்ப வேண்டியிருக்கும்.

மண்வாசனை ரேவதிக்கு, தன் மண்ணை விற்க மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பவராக ஜஸ்ட் எட்டிப் பார்க்கிற வேலை.

அழகிய காதல் கொஞ்சம், அதிரடி சம்பவங்களுக்கு இல்லை பஞ்சம் என்றாகிவிட்ட கதைக்களத்துக்கு பொருத்தமான அதிரடி ஆர்ப்பாட்ட பின்னணி இசையைத் தந்திருக்கும் கோவிந்த் வசந்தா ‘கல்லா நிக்கிறீயே’ பாடலை செவிகளுக்கு இதமாகத் தந்து மனதில் ஏற்றியனுப்புகிறார்.

திரும்பிய பக்கமெல்லாம் பசுமை நிரம்பியிருக்கும் மலைப் பிரதேசத்தை கழுகுப் பார்வையில் இருளிலும் பகலிலும் வளைத்துச் சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன்.

ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள பிரமாண்ட பங்களாவை அடைய விரும்பும் எம் எல் ஏ. அந்த பங்களாவை லாட்ஜ் போல் மாற்ற விரும்பும் தம்பதி. அந்த இரு தரப்புக்குமான மோதலை மினி போர் அளவுக்கு காட்சிப்படுத்தவெல்லாம் உச்சபட்ச தைரியம் வேண்டும். அது இயக்குநர் ஆர். கார்த்திகேயனிடம் இருந்திருக்கிறது. படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் அப்படியொரு தைரியம் தேவைப்படலாம்.

-சு.கணேஷ்குமார்

 

 

REVIEW OVERVIEW
Anbil Avan MOVIE REVIEW
Previous articleபத்தா சினிமா விமர்சனம்
Next articleஏழு கடல் ஏழு மலை சினிமா விமர்சனம்
anbil-avan-movie-reviewகாதலும் மோதலுமாய் 'அன்பில் அவன்.' சூர்யா - இயல் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி. இயலுக்கு மலைப் பிரதேசம் ஒன்றில் ஹோம் ஸ்டே பிஸினஸ் தொடங்க வேண்டுமென்பது கனவு. அதை நிறைவேற்ற சூர்யா எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமே கதையோட்டம்... சூர்யாவாக அசோக் செல்வன், இயலாக பிரீத்தி முகுந்தன். லவ் கெமிஸ்ட்ரி இயல்பாக இருக்க, வலிந்து திணிக்கப்பட்ட சண்டை சச்சரவுகளில் பிரீத்தியின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்