அருண் விஜய் – இயக்குநர் விஜய் இணைந்த ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவமுள்ள இந்த கதையில் அருண் விஜய் முதல் முறையாக இயக்குநர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.அருண்விஜய்யுடன் ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் தற்போதைய படப்பிடிப்பு குறித்து இயக்குநர் விஜய் “செப்டம்பர் மாதத்தில் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. பின்பு, 3.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் பிரம்மாண்டமான லண்டன் சிறையை செட் அமைத்து அங்கு படத்தின் பெரும்பாலான பகுதியை படமாக்கினோம்” என்றார்.அருண்விஜய் மற்றும் ஏமி ஜாக்சனுடன் படத்தில் இணைந்து பற்றி கூறும்போது, “இந்தக் கதை முழுவதும் ஆக்‌ஷன் மற்றும் எமோஷன்களால் பின்னப்பட்டது. இது இரண்டையும் சரியான விதத்தில் வெளிப்படுத்தும் ஒரு நடிகரை தேடியபோது, இதை சரியாக செய்யக்கூடியவர் அருண் விஜய் என தோன்றியது. அதை படத்தில் சிறப்பாகவும் செய்திருக்கிறார். ஏமி ஜாக்சன் லண்டன் சிறையின் ஜெயிலராக நடித்திருக்கிறார். அவருக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. மீண்டும் அவரை கேமரா முன் கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. நிமிஷா விஜயன் படத்தின் இன்னொரு ஈர்க்கக் கூடிய விஷயமாக இருப்பார்” என்றார்.

‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் ஒரு தந்தை தனது மகளுக்காக லண்டன் நோக்கி பயணிக்கிறார். அங்கு நேரும் சிக்கல்களை சமாளிக்க வேண்டிய சூழல் வருகிறது. இதுதான் கதைக்களம்!

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு: எம். ராஜசேகர் & எஸ். ஸ்வாதி,
இணைத்தயாரிப்பு: சூர்ய வம்சி, பிரசாத் கோதா & ஜீவன் கோதா,
இசை: ஜிவி பிரகாஷ் குமார்,
திரைக்கதை: மகாதேவ்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
படத்தொகுப்பு: அந்தோணி,
சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட்’ சில்வா,
கலை இயக்கம்: சரவணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here