சைமன்.கே.கிங் ‘கொலைக்காரன்’, ‘கபடதாரி’, ‘சத்யா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து கவனம் ஈர்த்தவர். சமீபத்தில் ஓடிடி.யில் வெளியான கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வலைத் தொடரிலும் பணியாற்றியிருந்தார்.
அவர் இப்போது புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ எனும் வலைத்தொடரில் (Web Series) தான் பணியாற்றுவதை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.
இந்த தொடரை ‘கொலைகாரன்’ திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். சைமன் கே கிங் – ஆண்ட்ரூ லூயிஸ் டைனமிக் ஜோடி, தங்களின் வரவிருக்கும் அமேசான் பிரைம் திரில்லர் தொடரான ‘வதந்தி’ மூலம் நம் அனைவரையும் இருக்கை நுனியில் அமர வைக்கப் போவது உறுதி!