Home விமர்சனம் தி ஹிட்டன் புரொடக்டர் (Boonie Bears: The Hidden Protector) சினிமா விமர்சனம்

தி ஹிட்டன் புரொடக்டர் (Boonie Bears: The Hidden Protector) சினிமா விமர்சனம்

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் ரசிக்கும்படியான படம் என்று சொல்லலாம். அப்படியான சாகசங்கள் நிரம்பிய அனிமேஷன் ஃபேண்டஸி படம். உலகளவில் பிரபலமான ‘பூனி பியர்ஸ்’ அனிமேஷன் கார்ட்டூன் திரைப்படத் தொடரின் 12-வது பாகம்.

ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டில் தாங்கள்தான் ராஜா என தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் பிரையர், பிராம்பிள் என்ற இரண்டு கரடிகள். அவர்களுடைய நண்பன் விக். அந்த மூன்று பேருக்கும் நியான் என்ற அரக்கனிடமிருந்து மாயாஜால சக்திகள் கிடைக்கிறது. அதன்மூலம் ஈவ் சிட்டி என்ற மாய உலகிற்குள் நுழைகிறார்கள். மூன்று பேருமாக சேர்ந்து, ஈவ் சிட்டியில் மனித குலத்தையும் உலகத்தையும் அழிக்கத் துடிக்கும் ‘ஷா’ என்ற கொடூரனின் சதியை முறியடிக்கிறார்கள்.

மாயாஜால சக்தி கிடைக்கும் விதம், ஷாவின் பலம், அவனை வீழ்த்துவதற்கான முயற்சிகள் என அங்கு அவர்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது என படு சுவாரஸ்ய காட்சிகளை உருவாக்கி படத்தின் பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் 1 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடி முடியும் இந்த படத்தை இயக்கியிருக்கிற ஹுய்டா லின்.

தற்காப்புக் கலை சார்ந்த சண்டைக் காட்சிகளும் கேரக்டர்களுக்கு இடையிலான மோதல்களில் இருக்கும் நகைச்சுவைகளும் குழந்தைகளை பல மடங்கு குஷியாக்கும்.

அனிமேஷன்  கேரக்டர்களில் விக்கிற்கு சியாவ் டான், பிரையர் கரடிக்கு பேட்ரிக் ஃப்ரீமேன், பிராம்பிள் ஜோசப் எஸ். லம்பேர்ட், நியான்நிக்கோலா வின்சென்ட் குரல் கொடுத்திருக்க,

குருபரன் இன்டர்நேஷனல், யாசிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழ் டப்பிங்கில் வசனங்களில் உள்ளூருக்கேற்ற மாறுதல்கள் செய்திருக்க, கலகலப்பு அதிகரிக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் ஒரே நேரத்தில் கலவையாக நடக்கும் பல சம்பவங்கள் சற்றே அலுப்பு சலிப்பை தருகின்றன. அதையெல்லாம் தாண்டி, மாய உலகத்தை ஆச்சரியமாக பார்க்க வைக்கும் VFX பங்களிப்பின் நேர்த்தி, 2D, 3D தொழில்நுட்ப அனிமேஷன் உருவாக்கம் என எல்லாமுமாக சேர்ந்து படத்தை பலமாக்கியுள்ளன.

வித்தியாசமான உலகத்துக்குள் பயணிக்கிற வழக்கமான ஃபேண்டஸி கதைக்கு வெரி வெரி இன்ட்ரஸ்டிங் என்று சொல்லும்படியான காமெடி கலாட்டாக்களை கலந்து கட்டிய திரைக்கதை கொடுத்த ‘டிக்கெட்டுக்கு செலவழித்த காசுக்கு ஒர்த்’ என்ற ஃபீலிங் தந்து விடுகிறது.

முகரம் பண்டிகையால் உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஒரு நாள் கூடுதல் விடுமுறையுடன் கூடிய இந்த வீக் என்டில் தியேட்டரில் 3 டி’யில் பார்த்து ரசிக்க நல்ல சாய்ஸ்!

REVIEW OVERVIEW
தி ஹிட்டன் புரொடக்டர் (Boonie Bears: The Hidden Protector) சினிமா விமர்சனம்
Previous articleகான் சிட்டி சினிமா விமர்சனம்
Next articleப்ராமிஸ் சினிமா விமர்சனம்
b-156குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் ரசிக்கும்படியான படம் என்று சொல்லலாம். அப்படியான சாகசங்கள் நிரம்பிய அனிமேஷன் ஃபேண்டஸி படம். உலகளவில் பிரபலமான 'பூனி பியர்ஸ்' அனிமேஷன் கார்ட்டூன் திரைப்படத் தொடரின் 12-வது பாகம். ஒரு அடர்ந்த காடு, அந்த காட்டில் தாங்கள்தான் ராஜா என தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் பிரையர், பிராம்பிள் என்ற இரண்டு கரடிகள். அவர்களுடைய நண்பன் விக். அந்த மூன்று பேருக்கும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்