அருள்நிதி நடிக்க, அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமான்டி காலனி. அமானுஷ்ய த்ரில்லராக உருவான அந்த படம் பெரியளவில் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு, முதல் பாகம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்து 8-ம் ஆண்டின் தொடக்கத்தில் (மே 22, 2015) வெளியாகியுள்ளது.
‘டிமான்டி காலனி -2’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்திற்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதோடு, படத்தை தயாரிக்கவும் செய்கிறார். அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.
டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியதன் மூலம் முதன்மையான இயக்குனர்களின் பட்டியலில் இணைந்து|ள்ளார்.

டிமாண்டி காலணி’யின் முதல் பாகத்தில் இருந்த பரபரப்பு, விறுவிறுப்பு, சுவாரஸ்யமான அமானுஷ்யக் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்களிடம் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டிமான்டி காலனி -2′ குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்துவிட கேட்டோம்… “டிமான்டி காலனி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மற்றும் படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இதயத்திற்கு நெருக்கமானது. பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தின், கருத்து மற்றும் பதில் முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் ‘டிமான்டி காலனி 2’ பற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளுளே 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின. அருள்நிதி சாரை அணுகியபோது, அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம்.
மேலும் இந்த படத்தில் அவர் இருப்பது ஒரு ரசிகர் கூட்டத்தை இழுக்கும் முக்கிய காரணியாக இருக்கும். என்னை நம்பி எனது இயக்குனர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி, மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனிப்பட்ட முறையில், ‘The Friday The 13th’, ‘Halloween’ to the contemporary ‘The Conjuring Universe’ என்ற ஹாலிவுட் படங்களின் தொடர் வரிசை என்னை எப்பொழுதும் ஈர்க்கும் ஒன்றாக இருந்தது. தெளிவான உத்வேகத்துடன், டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.