கதையின் நாயகனாக ஆரி அர்ஜுனன், கதையின் நாயகியாக சாஸ்வி பாலா நடித்திருக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.’ இந்த படத்தில் பக்ஸ் பகவதி பெருமாள், மொட்டை ராஜேந்திரன் , பிஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் யு. கவிராஜ் இயக்கியிருக்கிறார்.
ஏழ்மை நிலையில் வசித்துவரும் கதைநாயகனுக்கு வேற்று கிரகத்திலிருந்து சதுர வடிவிலான வினோதப் பொருள் ஒன்று கிடைக்கிறது. அதனால் அவருக்கு அதீத சக்தி உண்டாகிறது. இதன் மூலம் அவர் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் இந்த பூமிக்கும் நன்மை செய்தாரா? அல்லது வேற்றுக்கிரகவாசிகள் அதனை மீண்டும் கைப்பற்றுவதற்காக பூமிக்கு வந்தார்களா? என்பதே படத்தின் சுவாரசியமான கதை.
ஃபேண்டஸி காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் டிரெய்லர் வெளியாகி லட்சக் கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 7-ம் தேதி உலகமெங்கும் ஓரே நேரத்தில் வெளியாகிறது. படத்தை சரஸ்வதி என்டர்பிரைசஸ் டி.செந்தில் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

படக் குழு:-
தயாரிப்பு: ராவுத்தர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பாளர் ஏ முஹம்மது அபூபக்கர்
இணை தயாரிப்பு: ஏ எம் மன்சூர்
இசை: கார்த்திக் ஆச்சார்யா
ஒளிப்பதிவு: ஜெ. லக்ஷ்மன்.
படத் தொகுப்பு: இயக்குநர் யூ. கவிராஜ்
கலை இயக்கம்: பி. சேகர்

