இளைஞர்கள் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானம் நடித்து, வரும் மே 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு.’ இந்த படத்தின் மூலம் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆனந்த் நாராயண் இயக்கியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்வில் சந்தானம் பேசியபோது, ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம்.
படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக இப்படத்தை எடுத்துள்ளார். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
இயக்குநர் ஆனந்த் நாராயண், நடிகை பிரியாலயா, தயாரிப்பாளர் அன்புசெழியன், அன்புசெழியனின் மகள் சுஷ்மிதா அன்புசெழியன், எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன், நடிகர் தம்பி ராமையா, நடிகர் கூல் சுரேஷ், ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண், இயக்குநர் செல்லா அய்யாவு, இசையமைப்பாளர் இமான், உள்ளிட்டோரும் நிகழ்வில் படம் பற்றி பேசினார்கள்.
படக்குழு:
தயாரிப்பு – கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புசெழியன், ஷ்மிதா அன்புசெழியன்
கதை, திரைக்கதை, வசனம் – எழிச்சூர் அரவிந்தன்
இசை – டி.இமான்
பாடல் வரிகள்: இயக்குநர் விக்னேஷ் சிவன், முத்தமிழ்
ஒளிப்பதிவு – ஓம் நாராயண்
எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – கல்யாண், பாபா பாஸ்கர்.