ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள படம் ‘ஜவான்.’
இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் முன்னோட்டத்தில் நயன்தாராவின் தோற்றம் அவரின் பாத்திரம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது. ஷாருக்கான், நயன்தாரா இருவரும் இணைந்து முதன்முறையாக திரைக்கு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள நயன்தாராவின் போஸ்டர் அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்து அவரின் நடிப்பு இப்படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.