நானும் வாணிபோஜனும் போட்டி போட்டு நடித்துள்ளோம்! -‘லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் பரத் பேச்சு

பரத், வாணிபோஜன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘லவ்.’ பரத் நடிக்கும் 50-வது படம் இது.
இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் அனி போப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ஆர்.பி. பாலா தயாரித்து, இயக்கியுள்ளார்.
மாறுபட்ட திரைக்கதையில், மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா 6.12. 2022 அன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் நடிகர் பரத், ”இந்த படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது. அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை, அந்த திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இது என்னுடைய 50-வது படமாக அமைந்தது மகிழ்ச்சி. வாணி போஜனுடன் மிரள் படத்தில் நடிக்கும் போது இந்தக்கதை கேட்க சொன்னேன். அவர் உடனே பிடித்து இப்படத்தில் வந்தார். அவருக்கு, எனக்கு இணையான பாத்திரம். மிகச் சிறப்பாக போட்டி போட்டு நடித்துள்ளோம். டேனி இதில் வித்தியாசமாக நடித்துள்ளார். விவேக் பிரசன்னா மிகச்சிறந்த ஆக்டர். இப்படம் உங்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்” என்றார்.நடிகை வாணி போஜன் ” ‘மிரள் படத்தில் பரத்துடன் நடித்து ரிலீஸாகிவிட்டது. மீண்டும் பரத்துடன் இன்னொரு படம் உடனே நடிக்க வேண்டுமா? என யோசித்தேன். ஆனால் இந்த கதை மிரள் படத்திலிருந்து மிகவும் மாறுபட்ட கதை. எனக்கு மிகவும் பிடித்தது. படத்தில் பரத்திடம் நிறைய அடி வாங்கினேன். நிறைய ஆக்சன் காட்சிகள், சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கிறது” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா, ”பரத்திடம் பல கதைகள் சொல்லி கடைசியில் இந்தக்கதை ஓகே ஆனது. ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா சொல்லித்தான் இந்தப்படம் நடந்தது. அவர் என் நெருங்கிய நண்பர். என்னை விட அவர் தான் இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்துள்ளார். விவேக் பிரசன்னாவை கண்டிப்பாக இப்படத்தில் கொண்டு வந்து விடுங்கள் என்று பரத் சொன்னார். அவரும் சூப்பராக நடித்துள்ளார். பரத், வாணி போஜன்  இருவரும் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் அடுத்ததாக எடுக்கும் படத்திற்கும் பரத் சார் தான் ஹீரோ. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மற்ற விவரங்கள் சொல்கிறேன்” என்றார்.

நடிகர் டேனியல், காலேஜ் படிக்கும்போது எங்க ஏரியாவில் நடிகர் பரத் ஜிம்முக்கு போகும் போது பார்த்திருக்கிறேன். இப்போது அவரோடு நடித்தது மகிழ்ச்சி. நடிகை வாணியுடன் இன்னொரு படமும் நடித்து கொண்டிருக்கிறேன். மிக நல்ல நடிகை. இந்தப்படம் மிக திரில்லிங்கான கதை, நிறைய டிவிஸ்ட் இருக்கிறது. இயக்குநர் ஆர்.பி. பாலா சூப்பரான ஆக்டர் அவரை நடிகராக பார்க்க ஆசை. இந்தப்படம் என்னோட கரியரில் முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா, ”பரத் – வாணி போஜன் வெற்றிக்கூட்டணியில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தின் கதையில் நிறைய ஆச்சர்ய திருப்பங்கள் இருக்கிறது. உங்களை மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு – RP Films R.P.பாலா – கௌசல்யா பாலா
இயக்கம்: R.P.பாலா
ஒளிப்பதிவாளர்: P.G.முத்தையா
இசை: ரோனி ரபேல்
எடிட்டர்: அஜய் மனோஜ்
கலை இயக்குனர்: தினேஷ் மோகன் (MFA)
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆண்டோ.எல்
ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம்
நடனம்: சந்தோஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here