இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறனைத் தாண்டி வந்த கதை இது! -‘ரத்தசாட்சி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் பேச்சு

எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையைத் தழுவி, மனதைக் கலங்கச் செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது ‘ரத்த சாட்சி.’

இந்த படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண் மாஸ்டர், ‘மெட்ராஸ்’ வினோத், ஆறுபாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், ஓஏகே சுந்தர், பிரவீன், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 6.12. 2022 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில், ”ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்த கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹா நிறுவனத்தின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை சொன்ன பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்துப்போகும் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். அவர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்” என்றார்.நடிகர் கண்ணா ரவி, ”இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது” என்றார்.இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ், இந்த படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. இந்த படத்தின் கதையில் ஒரு ஆன்மா இருக்கிறது” என்றார்.

படக்குழு:
தயாரிப்பாளர்கள் – அனிதா மகேந்திரன் & டிஸ்னி (மகிழ் மன்றம்) ஆஹா தமிழ்
திரைக்கதை, இயக்கம் – ரஃபீக் இஸ்மாயில்
எடிட்டர் – பிரகாஷ் கருணாநிதி
ஒளிப்பதிவு  – ஜெகதீஷ் ரவி
இசையமைப்பாளர் – ஜாவேத் ரியாஸ்
பாடலாசிரியர் – விஷ்ணு எடவன், கார்த்திக் நேதா
ஸ்டண்ட்- அசோக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here