மூன்று ஹீரோயின்களுடன் முருகா அசோக் நடிக்கும் ‘லாரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி!

முருகா அசோக், அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகளுடன் நடித்துள்ள ‘லாரா’ திரைப்படம் சில வருடங்கள் முன் காரைக்காலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி சஸ்பென்ஸ், பரபரப்பு நிறைந்த திரில்லர், மர்மங்கள் கொண்ட புலனாய்வு என திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ், கார்த்திகேசன், எஸ்.கே.பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சில நாட்கள் முன் படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார். அதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். அப்போது, படக்குழுவினரிடம் படத்தின் கதைக்களம் பற்றி கேட்டறிந்து பாராட்டி, வாழ்த்தியுள்ளார். அதையடுத்து உற்சாகத்துடன் படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த எம்.கே.அசோசியேட்ஸ் எம்.கார்த்திகேசன், தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: ஆர்.ஜெ.ரவின்
இசை: ரகு சரவண் குமார்
பாடல் வரிகள்: எம் கார்த்திகேசன், முத்தமிழ்
படத்தொகுப்பு: வளர்பாண்டி

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here