சுந்தர்.சி நாயகனாக நடிக்க, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் ‘ஒன் 2 ஒன்.’
திரிஷா நடித்த ‘பரமபத விளையாட்டு’ படத்தை இயக்கிய கே.திருஞானம் எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விறுவிறுப்பான திரைக்கதையோடு பரபரப்பான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் வர்மன், நடிகை நீத்து சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் சித்தார்த் விபின். அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். அவ்ரது இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் திருஞானம் அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் வெளியீடு பற்றிய விபரங்கள் விரைவில் தெரியவரும்.