அழுத்தமான கதையம்சமுள்ள படங்களை, ரசிகர்களைக் கவர்கிற விதத்தில் தயாரித்து வருபவர் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்ஷ்மண் குமார்.
இவரது தயாரிப்பில், நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ‘சர்தார்’ திரைப்படமும்,
சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, பொழுதுபோக்கு அம்சங்களுடன், ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகி வெளியான ‘காரி’ திரைப்படமும் பெரியளவில் வெற்றி பெற்றன.
அதையடுத்து ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ள படத்தைத் தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
‘கொலைகாரன்’ திரைப்படம், சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான ‘வதந்தி’ வெப் சீரிஸ் ஆகியவற்றை இயக்கி அவற்றின் வெற்றி மூலம் கவனிக்க வைத்தவர் ஆண்ட்ரூ லூயிஸ்.வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லெஷ்மண் குமார் வெற்றிப் படைப்புகளை வழங்கும் ஆண்ட்ரூ லூயிஸ் இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.