‘வாரிசு’ படத்தோடு, அமெரிக்கப் பாடகி கதைநாயகியாக நடித்துள்ள ‘வர்ணாஸ்ரமம்’ படத்தின் டிரெய்லர்!

அமெரிக்க பாடகி சிந்தியா லௌர்டே கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‘வர்ணாஸ்ரமம்.’

ஆணவக்கொலை பற்றிய கதைக்களத்தில் நெஞ்சைப் பதறவைக்கும் விதத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராமகிருஷ்ணன், ‘பிக்பாஸ்’ அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், விசை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் ‘வாரிசு’ படம் ரிலீஸாகிற தியேட்டர்களில் திரையிடப்படவிருக்கிறது.  படம் பற்றிய கூடுதல் தகவல்கள்:-

தமிழ்ப் படங்களில் பாடுவதற்காக சென்னை வந்த அமெரிக்க பாடகி சிந்தியா லௌர்டே முதற்கட்ட வாய்ப்பை உருவாக்கிக் கொள்வதற்காக படத்தயாரிப்பில் ஈடுபட்டார். அதற்காக ‘சிந்தியா புரொடக்சன் ஹவுஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். சுகுமார் அழகர்சாமியின் கதையைத் தேர்வு செய்து அவரையே படத்தை இயக்கச் சொன்னார். கதையின் நாயகியாக நடித்து, தனக்கு பிடித்தமான பாடலையும் பாடி, படத்தையும் தயாரித்துள்ளார்.

இசை: தீபன் சக்கரவர்த்தி

பாடல்கள்: உமாதேவி

எடிட்டிங்: கா.சரத்குமார்

ஒளிப்பதிவு: பிரவீணா.எஸ்

சண்டைப் பயிற்சி: ராஜேஷ்கண்ணன்

கலை: புத்தமித்திரன்

நிர்வாக தயாரிப்பு: ஏ.பி.ரத்னவேல்

தயாரிப்பு மேற்பார்வை: எம்.பாலமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here