இந்தியாவில் நடைபெறுகிற திரைப்பட விழாக்களில் பெரிதும் பெருமைவாய்ந்தது புனே சர்வதேச திரைப்பட விழா. சமீபத்தில் நடந்த அந்த விழாவில், கடந்த டிசம்பர் 3 மற்றும் 7-ம் தேதி கட்டில் படம் திரையிடப்பட்டது.
படத்தைப் பார்த்த மாற்று மொழி திரைப்படக் கல்லூரி மாணவர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், சினிமா ஆர்வலர்கள் பலரும் ”கட்டில் படத்தின் கதை எங்களது குடும்பத்தில் நடந்தது போலவே உணர்ந்தோம்” என்று கருத்து தெரிவித்தனர்.
விழாக் குழுவினர் மூலமாக, கட்டில் திரைப்படத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் தலைசிறந்த சினிமா பேராசிரியர் சமர் நாட்டக்கே, கட்டில் படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபுவை பேட்டி எடுத்தது பெருமைமிகு நிகழ்வு!
பேராசிரியர் சமர் நாட்டக்கே, ”தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் எப்போதுமே தனித்துவம் வாய்ந்தவர்கள். அந்த வரிசையில் இ.வி.கணேஷ்பாபுவும் வந்துள்ளார். தவிர, கட்டில் திரைப்படத்திற்காக அவர் வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தகம் அனைத்து சினிமா கல்லூரி நூலகங்களிலும் வைக்கக் கூடிய தகுதியோடு உள்ளது” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளது கட்டில் படத்துக்கு கிடைத்த உயரிய கெளரவாக கருதப்படுகிறது.