கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகும் ‘ராஜபுத்திரன்’ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.
துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு, 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்க, கன்னட நடிகர் கோமல் குமார் தமிழில் அறிமுகமாகிறார். கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இயக்குநர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி இருவரிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றிய மகா கந்தன் படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.
படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, அறிமுக இசையமைப்பாளர் நவ்பல் ராஜாவின் இசையில், அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் விதமாக டிஆரின் வெண்கலக் குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படத்தை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இளம் தயாரிப்பாளர் கே எம் சபி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். ஆலிவர் டேனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.