சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே 30-ம் தேதி டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி யளவில் நடைபெறவிருக்கிறது.நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார். கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன், தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
‘யெல்லோ பியர் புரொடக்சன்ஸ்’ சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே ‘SN Musicals’ மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
பாடல்களை தமிழில் யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர், தெலுங்கில் ராகெண்டு (rakendu), இந்தியில் ராஷ்மி விராக் (Rashmi Virag), மலையளத்தில் ஹரி நாராயண் (Hari Narayan) ஆகியோர் எழுதியுள்ளனர்.
படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
படக்குழு:
ஒளிப்பதிவு – பவன் கே.பவன்
கலை இயக்குநர் – கமருதீன்
எடிட்டிங் – டோபி ஜான்
ஆடை வடிவமைப்பு – ஏகன்