பெண்களின் ஆசைகளின் தடைகற்களின் கலவையாக ஒரு படைப்பு… பெரியளவில் வரவேற்பை குவிக்கும் பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி.’

‘ஸ்வீட் காரம் காபி’ என்கிற பிரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடர் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பிரத்யேக பெண்களை பற்றிய நம்ப முடியாத கதை. ஆனால் மறக்க முடியாத அசாதாரண பயணத்தை தொடங்கும் வெவ்வேறு தலைமுறையினர் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்துகின்றனர்.

சலிப்பான நடைமுறைகளிலிருந்து தப்பித்து, அவர்களை பிணைக்கும் சமூக விதிமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான.. அவர்களின் தேவையால் தூண்டப்பட்ட ஒரு மனக்கிளர்ச்சியான சாலை பயணத்தை தொடங்கி, அந்தப் பயணம் விரைவில் சுய கண்டுபிடிப்புடன் உருமாறும் பயணமாக மாற்றம் பெறுகிறது.

தலைப்பை போலவே ‘ஸ்வீட் காரம் காபி’ படைப்பில் சில அதிசயமான இனிப்பான தருணங்களும் மற்றும் ஆச்சரியமளிக்கும் காரமான தருணங்களும் உள்ளன. காலையில் காபியை சீக்கிரமாக பருகுவதைப் போலவே.. ‘ஸ்வீட் காரம் காபி’ ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களது நரம்புகளை மென்மையாக சாந்தப்படுத்துகிறது.

இது பெண்களுக்கு அதிகாரமளித்தலை பற்றிய தொடர். மூன்று பெண்களைப் பற்றிய ஒரு வசீகரமான கதையையும் சொல்கிறது. அவர்கள் தங்கள் சொந்த உலகங்களில் சிக்கி, அழகியல், உற்சாகம் மற்றும் ஆன்மாவை தேடும் பயணத்தை தொடங்க.. பார்வையாளர்களிடம் தங்களை ஒப்படைக்கிறார்கள்.

பிஜாய் நம்பியார் கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகிய மூன்று இயக்குநர்கள் இயக்கியிருக்கும் இந்த தொடரில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பெண்களின் ஆசைகள், பாதுகாப்பின்மை மற்றும் தடைகற்கள் ஆகியவற்றின் அழகான கலவையாகும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here