பாடகரான முகேன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் தமிழக மக்களிடையே பிரபலமானார். கவின் இயக்கிய ‘வேலன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, கதாநாயகனாக கிராமத்து இளைஞனாக நடித்து கவனம் ஈர்த்தார். படம் பரவலான வெற்றி பெற்றது.
அந்த இயக்குநர் கவின் – முகேன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிற புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ‘கோல்டன் ரெட்ரீவர்‘ வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஜி. மணிக்கண்ணன் தயாரிக்கிறார். அவர் தயாரிப்பில் உருவாகும் 2-வது படம் இது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கி சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்த படத்திற்கு, ‘பார்க்கிங்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். ‘டாடா’ படத்திற்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.