அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தீயவர் குலைகள் நடுங்க.’ இந்த படத்தில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.‌

இன்வெஸ்டிகேசன் ஆக்சன்  திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு
இசை – பரத் ஆசிவகன்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
வசனம் – நவநீதன் சுந்தர்ராஜன்
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here