‘லியோ’வுக்கு முன்னதாக ரிலீஸாகும் ‘தி ரோட்.’ த்ரிஷா ரசிகர்கள் உற்சாகம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு திரிஷா நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் ‘தி ரோட்.’

‘தளபதி’ விஜய்யோடு திரிஷா நடித்துள்ள ‘லியோ’ வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பாக வரும் அக்டோபர் 6-ம் தேதி ‘தி ரோட்’ வெளியாகவிருக்கிறது.

‘இந்த படம் மதுரையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்கிறார் படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் அருண் வசீகரன்.

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதால் படம் முழுவதும் திரிஷா மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறார். சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு நேரடியாக சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ பாத்திரத்தில் நடித்த சபீர் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திர வடிவமைப்பும், அதை அவர் கையாண்ட விதமும் படத்திற்கு வலு சேர்த்திருப்பதாக கூறும் படக்குழுவினர் சபீரின் திரையுலகப் பயணத்தில் இந்த படம் மிக முக்கியமானதாக அமையும் என உறுதியளிக்கிறார்கள்.

படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, லட்சுமி பிரியா, செம்மலர் அன்னம், ராட்சசன் வினோத், கருப்பு நம்பியார், நேகா உள்ளிட்ட நடிகர் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாம் சி எஸ் இசையமைக்க, கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை வரும் செப்டம்பர் 3-ம் வாரம் திரைப் பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள்.

‘தி ரோட்’ பட விளம்பரங்களில் திரிஷாவின் பெயருடன் சவுத் குயின்’ என்ற பட்டத்தை படக்குழுவினர் இணைத்தனர். தங்களுக்குப் பிடித்த நடிகை முதன்முறையாக அப்படியொரு அடைமொழியோடு அழைக்கப்படுவதால் திரிஷாவின் ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here