‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பால் டப்பா பாடிய உற்சாகம் தெறிக்கும் 2-வது பாடல் வெளியீடு!

‘சீயான்’ விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முதல் பாடலான ‘ஒரு மனம்’ ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பை பெற்ற பிறகு இப்போது இரண்டாவது சிங்கிளாக ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடல் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் இணையும் போதெல்லாம் பாடல்கள் நிச்சயம் மனதை கொள்ளையடிக்கும். அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாடலைத் தொடர்ந்து 2-வது பாடலும் ஹிட்டடித்துள்ளது.

 

இந்த பெப்பியான பாடலை ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர். பாடகரும் பாடலாசிரியருமான (Indie rapper and lyricist)
பால் டப்பா இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கு முன்பு வெளியாகி ஹிட்டான ‘ஐ ஐ ஐ’ பாடலையும் அவரே எழுதியுள்ளார்.

இப்போது வெளியான பாடல் டிரெண்டிங்கில் உள்ளது. இந்தப் பாடலை மியூசிக் லேபிளுடன் இணைந்து தங்கள் இரண்டாவது சிங்கிளாக வெளியிடுவதில் படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் சீயான் விக்ரமுடன் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஆர் ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, மாயா எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இயக்குநர்: கௌதம் வாசுதேவ் மேனன்,
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்,
ஒளிப்பதிவாளர்கள்: மனோஜ் பரமஹம்சா, எஸ்ஆர் கதிர் ISC, விஷ்ணு தேவ்,
படத்தொகுப்பு: அந்தோணி,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஸ்டைலிங் மற்றும் உடைகள்: உத்ரா மேனன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here