கள்ளச்சாராயம் மற்றும் பெண்களைக் கடத்தும் பெரிய மனிதர்களை தோலுரித்துக் காட்டும் விதமான கதைக்களத்தில், பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கியிருக்கும் படம் ‘வெங்கட் புதியவன்.’ படம் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது.
ஏற்கனவே கன்னடப் படங்களில் நடித்துள்ள வெங்கட் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சில்பா நடித்துள்ளார். அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன், புருஸ்லீ ராஜீவ், ஏ.நிக்சன், கேப்டன் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் ஏழு சண்டைக் காட்சிகளின் மூலம் இந்த படம் தோலுரித்துக் காட்டவிருக்கிறது.
இயக்குநர் சண்டைப் பயிற்சியாளர் என்பதால், இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக, தத்ரூபமாக அமைத்துள்ளார். இயக்குநரின் முந்தைய படமான ‘முந்தல்’ கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோவிலில் எடுக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி.
படக்குழு:-
எழுத்து, இயக்கம், சண்டைப் பயிற்சி – ஸ்டண்ட் ஜெயந்த்
தயாரிப்பு – ‘வி.என்.மூவிஸ்’ வெங்கடேஷ்
இசை விசால் தியாகராஜன்
ஒளிப்பதிவு – பீட்டர்
நடனம் – சதீஷ், சூப்பர் பாபு
பாடல்கள் – பருதிமான்
மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்