இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விருஷபா திரைப்படம் வரும் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்த ஒரு காவியமாக உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை–மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது.
படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா ஆர் கபூர் பேசியபோது “எங்களின் மிக பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ நவம்பர் 6 அன்று வெளியாக இருப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது என் மனதுக்கு நெருக்கமான கதை – அழுத்தமான எமோஷன், டிராமா, காதல் ஆகிய அம்சங்களுடன் இந்திய சினிமாவின் மாபெரும் காவியமாக உருவாகியுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு வர வெகு ஆவலாக உள்ளோம்’ என்றார்.
இயக்குநர் நந்த கிஷோர் “விருஷபா மூலம் எமோஷன் நிறைந்த பிரம்மாண்ட காவியத்தை உருவாக்க விரும்பினோம். இது உறவுகள், தியாகம், விதி ஆகியவை மோதிக்கொள்ளும் ஒரு உணர்ச்சி மிகுந்த கதை. இப்படம் உருவாக படக்குழு முழுவதும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் இதை பார்வையாளர்கள் காணப்போகிறார்கள் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது” என்றார்.

