அடுத்த மாத பிறந்தநாளுக்கு இப்போதே நலத்திட்ட உதவிகள்… சுற்றிச் சுழலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 22 .5 .2022 அன்று பல்வேறு இடங்களில் 9 புதிய மக்கள் இயக்க பெயர்ப்பலகையை அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி என்.ஆனந்து அவர்கள் திறந்துவைத்து ஏழை எளிய மக்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி மாநில செயலாளர் திரு. ஜி.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

முதற்கட்டமாக புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் திரு. வசந்த் அவர்களின் மேற்பார்வையில்  திரு.செல்வா மற்றும் திரு.மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் ௨ புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு  அரியங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமையில் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி ,300 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் , 20விவசாயிகளுக்கு உறம் மூட்டைகளை மற்றும்
300 குடும்பங்களுக்கு ஒரு நபர்க்கு 3கிலோ அரிசி,  100 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாளி , 300 நபர்க்கு பிளாஸ்டிக் குடம் மற்றும் நீர்மோர்  மக்களுக்கு  வழங்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக மணவெளி  தொகுதி இளைஞர் அணி தலைவர் திரு. வசந்த் அவர்கள் மேற்பார்வையில திரு பிரசாத் அவர்கள் ஏற்பாட்டில் புதிய பெயர் பலகை திறக்கப்பட்டு 200 பெண்களுக்கு புடவை ,300 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி, 800 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் பென்சில் பேனா வழங்கப்பட்டது.

மூன்றாம் கட்டமாக ஏம்பலம் தொகுதியை சேர்ந்த திரு.கிருஷ்ணசாமி அவர்களின் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 700 ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி, 700 பெண்களுக்கு புடவை, 700 நபர்களுக்கு வேட்டி, 700 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சிலும்,

ஏம்பலம்  தொகுதி  தலைவர் திரு.மணிகண்டன் மற்றும் இளைஞரணி தலைவர் திரு மதன் அவர்களின் முன்னிலையில்  திரு.மணி அவர்களின் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த  350 ஏழை எளிய மக்களுக்கு புடவை, 500 நபர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, 400 மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா,பென்சில ஸ்கேல், ரப்பர் மற்றும் 300 பொது மக்களுக்கு லட்டு  வழங்கப்பட்டது.

நான்காம் கட்டமாக திருபுவனை தொகுதி இளைஞரணி தலைவர் திரு.ராஜா   மேற்பார்வையில் திரு.மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 200 ஏழை எளிய மக்களுக்கு  புடவை, 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 200 பொது மக்களுக்கு மதிய உணவும்,

திரு. தமிழரசன் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு  அப்பகுதியை சேர்ந்த 20 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 50 பொது மக்களுக்கு மதிய உணவும்,

திரு. ஜெயக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 200 பெண்களுக்கு புடவை, 500 பொதுமக்களுக்கு மதிய உணவு, 250 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட் புக் மற்றும் உபகரணங்களும்

திரு. அசோக் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மக்கள் இயக்க பெயற்பலகை திறக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 100 ஏழை எளிய மக்களுக்கு  காய்கறிகள், 200 புடவை,  250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்புக், பேனா, பென்சில், 250 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாக்ஸ், 300 பொது மக்களுக்கு மதிய உணவாக பிரியாணி  வழங்கப்பட்டது.

இவ்விழாவில்  தொகுதி தலைவர்கள் முதலியார்பேட்டை மணிபாலன், ராஜ்பவன் பிரதீபன், உழவர்கரை ராஜசேகர், திருபுவனை கிருஷ்ணா, கதிர்காமம் வேல்முருகன் இளைஞரணி தலைவர்கள் கதிர்காமம் அருள்பாண்டி, வில்லியனூர் சுகுமார்,   நிர்வாகிகள் உழவர்கரை நிரேஷ்,  உருளையன்பேட்டை பிரபு, நாகராஜ், அரியாங்குப்பம் ரவி பிரவீன் மணவெலி  சந்தோஷ், திருபுவனை பாபு கார்த்திக் ஆனந்தராஜ் மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here