சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தை தங்கம் பா சரவணன் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் தங்கம் பா.சரவணன் பேசும்போது, இது ஆக்சன், செண்டிமெண்ட் மற்றும் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படமாக இருக்கும். இந்த திரைக்கதையை நம்பி, இப்படத்தை படமாக்க சம்மதம் தந்ததற்காக தயாரிப்பாளர் மோகன் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். சசிகுமார் சார் என்னுடைய முந்தைய படமான ‘அஞ்சல’ படம் பார்த்து, என்னுடைய முயற்சியை முழுமையாக பாராட்டினார்.
அவர் இந்த திரைக்கதையை கேட்டபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. அதை தாண்டியும், திரைக்கதையில் ஏராளமான ஆச்சர்யங்களும் உள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ் மோகன், அபிராமி ராகுல் பவணன், ஜி.எம் சுந்தர், ஜோ மல்லூரி, தயானந்த் ரெட்டி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் சாம் C.S. (இசை), ராமி (ஒளிப்பதிவு), ஷான் லோகேஷ் (எடிட்டர்), வைரபாலன் (கலை), விக்கி (ஸ்டண்ட் இயக்குனர்), ரமேஷ் (காஸ்ட்யூமர்), தினகரன் (மேக்கப்மேன்), குமரேசன் (ஸ்டில்ஸ்), சந்திரன் ( ஸ்டோரி போர்டு), P. பாலகோபி (எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்) N. P. கொளஞ்சி (புராஜக்ட் டிசைனர்) M.முரளிதரன் – (புரடக்சன் கண்ட்ரோலர்) சுரேஷ் சந்திரா & ரேகா D one (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.