இது கடுமையான, தரமான உழைப்பை வழங்கியிருக்கும் படம்! -‘யூகி’ படம் குறித்து டாக்டர் பிரபு திலக் பேச்சு

டாக்டர் பிரபு திலக் வழங்கும் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’

11:11 தயாரிப்பு நிறுவனம் டாக்டர். பிரபு திலக் வழங்கி வரும் படங்கள் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘யூகி’ படத்தை வழங்குகின்றனர்.

11:11 புரொடக்‌ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், ” ‘யூகி’ படத்தின் உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில் பெருமை. பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையிலான சிறப்பான சில அம்சங்கள் இந்தக் கதையில் உள்ளது. 11:11 புரொடக்‌ஷன்ஸ் எப்போதுமே தனித்துவமான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டும். அந்த வரிசையில் ‘யூகி’ படமும் நிச்சயமும் தனித்துவமான கதையாக அமையும் நடிகர்கள் கதிர், நடராஜன் சுப்பிரமணியம், நரேன், ஆனந்தி, பவித்ர லக்‌ஷ்மி மற்றும் பலர் படத்தில் தங்களது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

இப்படி திறமையான நடிகர்கள், தொழில்நுட்பக்குழு படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கின்றனர் அது நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. தனித்துவமான புரோமோஷன் திட்டங்கள் குறித்து பேசி வருகிறோம். உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கோம். வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

திரைக்கதை: ஜாக் ஹாரிஸ்,
கதை, வசனம்: பாக்கிராஜ் ராமலிங்கம்,
ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷ்,
எடிட்டிங்: ஜாமின்,
இசை: ரஞ்சின் ராஜ்,
ஒளிப்பதிவு: ஸ்ரீ கிரிஷ்,
இணை இயக்கம்: K ஸ்ரீதர்,
VFX மேற்பார்வை: பிரஷாந்த் K நாயர்,
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஷிஜில் சில்வெஸ்டர்,
பின்னணி இசை & ஒலி வடிவமைப்பு: டான் வின்சென்ட்,
பாடல் வரிகள்: கபிலன்,
கலை இயக்கம்: கோபி ஆனந்த்,
சண்டைப் பயிற்சி: ஃபோனிக்ஸ் பிரபு,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: ஷிலு அலெக்ஸ்,
தயாரிப்பு கட்டுப்பாடு: T முருகேசன்,
DI: Fire Fox ஸ்டுடியோஸ்,
கலரிஸ்ட்: ஸ்ரீகாந்த் ரகு,
ஒப்பனை: வினோத் சுகுமாறன்,
ஆடை வடிவமைப்பாளர்: நிவேதா ஜோசப்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா (D’One),
படங்கள்: சந்துரு- சுஜீஷ் போஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here