நடிப்பாளுமை சிலம்பரசன் டி ஆர் – இசையாளுமை யுவன் சங்கர் ராஜா இருவரும் இருவரும் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சிக்காக இணைகிறார்கள்.
இந்த இசை நிகழ்ச்சி மலேசியாவில் வரும் ஜூலை 15-ம் தேதி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.
சிலம்பரசன் டி.ஆர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்கவிருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் டி.ஆர். மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் நிகழ்ச்சிக்கு பெரியளவில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் இருவரும் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். அவர்களிடம் பேசியபோது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசன் டி.ஆர் இருவரையும் இணைத்திருக்கிறோம். யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவின் ஆறு மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருக்கிறோம்” என்றார்கள்.