4500 தியேட்டர்களில் வெளியாகவிருக்கும்‘விருஷபா’வில் மோகன்லாலுக்கு மகனாக தெலுங்கு நடிகர் ரோஷன் மேகா தேர்வு!

மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘விருஷபா.’ காவிய ஆக்சன் பொழுதுபோக்குப் படைப்பாக பல மொழிகளில் தயாராகவிருக்கும் இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் உற்சாகமாக நடந்தது.

அதையடுத்து இப்போது படத்தில் மோகன்லாலின் மகனாக நடிக்க தெலுங்கு நடிகர் ரோஷன் மேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2024-ம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் விருஷபா, தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான அதி தீவிரமான வியத்தகு காவிய கதையாக உருவாகிறது. இந்த படத்தில் நட்சத்திர நடிகர்களும், அதிநவீன விஎஃப் எக்ஸ் மற்றும் உயர்தரமான அதிரடி சண்டைக் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும் வகையில் இடம்பெறுகிறது’ என்கிறார்கள் படக்குழுவினர்.

இயக்குநர் நந்த கிஷோர் பேசும்போது, ரோஷனின் முந்தைய படங்களைப் பார்த்தேன். அவரது நடிப்புத் திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். மோகன்லாலின் மகனாக நடிக்க அவர் பொருத்தமானவர் என்பதை உணர்ந்தேன். அவர் இந்த படத்திற்கு பெரும் பலமாக இருப்பார்” என்றார்.

மோகன்லாலுக்கு மகனாக நடிப்பது குறித்து ரோஷன் மேகாவிடம் கேட்டபோது, ‘‘இந்த அற்புதமான படத்தில் பணியாற்றுவதை பெருமையாக உணர்கிறேன். மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். படத்தில் என்னுடையது சவாலான பாத்திரமாக இருக்கும். இயக்குநர் நந்தாவின் பார்வைக்கு ஏற்ப, கதாபாத்திரத்துடன் தன்மையுணர்ந்து நடிக்க தயாராகி வருகிறேன்” என்றார்.

படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. படத்தை 2024-ல் உலகம் முழுவதும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here