‘மாறன்’ சினிமா விமர்சனம்

மாறன்‘ சினிமா விமர்சனம்

நேர்மையா இருக்குறதெல்லாம் சரிதான்; சாமர்த்தியம் இல்லாட்டி சங்குதான்.’ மாரல் சொல்லும் ‘மாறன்.’

அப்பா ராம்கி நேர்மையான, துணிச்சலான புலனாய்வுப் பத்திரிகையாளர். குற்றச் சம்பவங்களின் பின்னணியை அலசி ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டறிந்து தனது எழுத்துக்களால் தோலுரிப்பவர். அந்த துணிச்சலால் எதிர்ப்புகளைச் சம்பாதித்து, கொலை செய்யப்படுகிறார்.
அவருடைய மகன் தனுஷ் வளர்ந்து, படித்து அப்பாவைப் போலவே புலனாய்வுப் பத்திரிகையாளராகிறார். உண்மைகளை உள்ளது உள்ளபடி துணிச்சலாக எழுதுகிறார். அந்த எழுத்தால், பாதிக்கப்படுகிற முன்னாள் அமைச்சர் சமுத்திரகனிக்கும் தனுஷுக்குமிடையில் தொடங்குகிறது மோதல். ஒரு கட்டத்தில், தனுஷின் தங்கை கடத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்படுகிறார்.
தனுஷின் தங்கையைக் கொன்றது சமுத்திரகனியாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு கதை நகர, திரைக்கதையில் இருக்கிறது இரண்டொரு டிவிஸ்ட்! இயக்கம்: கார்த்திக் நரேன்

தனுஷ் படு ஸ்டைலாக வருகிறார். அதைவிட ஸ்டைலாக ஆடுகிறார். சோகக் காட்சிகளில் பரிதாப முகபாவம் காட்டுவது, சண்டைக் காட்சிகளில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்துவது அத்தனையும் அக்மார்க் அட்டகாசம்!

கண்ணுக்குள் நிறைகிற அழகு, காந்தமாய் ஈர்க்கிற சிரிப்பு என தனுஷின் தங்கையாக ஸ்ம்ருதி வெங்கட். தமிழ் சினிமாவில், அப்பா அம்மாவை இழந்து அண்ணனால் வளர்க்கப்படும் தங்கைகள் என்னவெல்லாம் செய்வார்களோ அதையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்கிறார். அத்தனையும் ரசிக்கும்படி!

வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து தேர்தலில் ஜெயிக்க முயற்சிக்கும் அரசியல்வாதி பாத்திரத்தில் சமுத்திரகனி. தன்னிடம் தனியாகப் பேச வரும் தனுஷிடம் மது அருந்திக்கொண்டே துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது கெத்து!

இரண்டொரு காட்சிகளில் வந்தாலும் கவனிக்கவைக்கிற ராம்கி, கிளைமாக்ஸ் சமயத்தில் எட்டிப் பார்த்தாலும் கெட்டியாக நிற்கிற இயக்குநர் அமீர், கூடவே இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், ஜெயப்பிரகாஷ், போஸ்வெங்கட் என தேர்ந்த நடிகர்களுக்கான கதாபாத்திர ஒதுக்கீடு கச்சிதம்!

சினிமா விமர்சகர் இட்ஸ் பிரசாந்தும் அவ்வப்போது தலை காட்டுகிறார். குறையொன்றுமில்லை!

தனுஷின் அலுவலகத் தோழியாக வந்து, லார்ஜ் அடித்து சார்ஜ் ஏற்றிக் கொள்வது தவிர நாயகி மாளவிகா மோகனனுக்கு உருப்படியான வேலை ஏதுமில்லை.

தனுஷ் குடிபோதையில் போலீஸை அடிக்க கை ஓங்க, அந்த கோபத்தை தீர்த்துக் கொள்ள ஸ்டேஷனில் வைத்து தனுஷை ஷூவால் உதைக்கிற அந்த இளைஞன் யார்? அட மகேந்திரன். (முன்னாள் ‘மாஸ்டர்’ மகேந்திரன்.)

ஆமையாய் நகரும் காட்சிகளைக்கூட அசுரவேகத்தில் கடத்துகிறது ஜிவி பிரகாஷின் பின்னணி இசை. உற்சாகத்துக்கு ‘உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச நீ ஆடு’, உருக்கத்துக்கு ‘யார் அடித்தாரோ கண்ணம்மா’ என பாடல்களிலும் வெரைட்டி காட்டியிருக்கிறது ஜிவி.யின் கீ போர்டு!

நிறைவாக ஒரு பேரா… 11.3. 2022 அன்று மாலை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ‘துருவங்கள் பதினாறு’ என்ற வித்தியாசமான, விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த கார்த்திக் நரேனா இதை இயக்கியது என யோசிக்காமல், ஏதோவொரு புதுமுக இயக்குநர் வேலை பழகியிருக்கிறார் என நினைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் ஆத்திரம் பிறந்து ஆல்கஹாலை தேட வேண்டியிருக்கும்!

REVIEW OVERVIEW
'மாறன்' சினிமா விமர்சனம்
Previous article‘கிளாப்’ சினிமா விமர்சனம்
Next articleபிரபுதேவா நடிப்பில் புதிய படம் ‘ரேக்ளா.’ இயக்குநர் மிஷ்கின் தொடங்கி வைத்து வாழ்த்து!
maaran-movie-review'மாறன்' சினிமா விமர்சனம் 'நேர்மையா இருக்குறதெல்லாம் சரிதான்; சாமர்த்தியம் இல்லாட்டி சங்குதான்.' மாரல் சொல்லும் 'மாறன்.' அப்பா ராம்கி நேர்மையான, துணிச்சலான புலனாய்வுப் பத்திரிகையாளர். குற்றச் சம்பவங்களின் பின்னணியை அலசி ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டறிந்து தனது எழுத்துக்களால் தோலுரிப்பவர். அந்த துணிச்சலால் எதிர்ப்புகளைச் சம்பாதித்து, கொலை செய்யப்படுகிறார். அவருடைய மகன் தனுஷ் வளர்ந்து, படித்து அப்பாவைப் போலவே புலனாய்வுப் பத்திரிகையாளராகிறார். உண்மைகளை உள்ளது உள்ளபடி துணிச்சலாக...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here